
நான் வெண்ணிலா தாயுமானவன். உங்கள் வேட்பாளர். நாம் தமிழர் கட்சியின் இராதாகிருஷ்ணன் நகருக்கான பிரதிநிதி. சூழலியல் அறிவியல் துறையில் ஆய்வறிஞராகவும், அத்துறையில் முனைவர் பட்டம் பெறவும் பணிபுரிந்தும், பயின்றும் வருகிறேன்.

• உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞானி. அகழி பசுமை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்.
• சென்னைஐஐடி மதராஸ்ல் (IIT Madras) உயிரியல் சீரமைப்பு (Bioremediation) துறையில்
7 ஆண்டுகள் sponsored-research விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளேன்.
பட்டப் படிப்பு - உயிரியல் தொழில்நுட்பத்தில், பி.டெக். (B.Tech). பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
மேற்பட்டப் படிப்பு - உயிர் மருந்தியல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். (M.Tech). உயிரியல் தொழில்நுட்ப மையம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், சென்னை.
முனைவர் பட்டம் (PhD.) - கூடுதலாகத் தற்போது சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute – CLRI)-இல் முனைவர் பட்டம் (PhD) பயின்று வருகிறேன்.